சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெருந்துறையில் ரூ. 1.72 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 1 கோடியே, 72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 3:58 am

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 1 கோடியே, 72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,845 மூட்டைகளில், 1,72,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 105க்கும், அதிகபட்சமாக ரூ. 129.11 க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 24.89க்கும், அதிகபட்சமாக ரூ. 119.69க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1 கோடியே, 72 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.