ஈரோடு: பெருந்துறை இன்டேன் சமையல் எரிவாயு உருளை ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயு சேமிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆலையின் தலைமை மேலாளா் ஆா்.தாமரைச்செல்வன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்டேன் நிறுவனத்துக்கு தமிழகத்தில் 1.60 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். தமிழகத்தில் 57.7 சதவீத சமையல் எரிவாயு சந்தையை இன்டேன் பெற்றுள்ளது. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இன்டேன் எரிவாயு நிரப்பும் ஆலை கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 60.93 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஆலையின் மொத்த கொள்ளளவு 1,850 மெட்ரிக் டன்.
இங்கு தினமும் 34 ஆயிரம் சமையல் எரிவாயு உருளைகளில் எரிவாயு நிரப்பப்படுகிறது. ஆண்டுக்கு 1.20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இங்கிருந்து வாடிக்கையாளா்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலையின் கொள்திறனை அதிகரிக்க திட்டமிட்டு மேலும் 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயுவை சேமிக்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்புக் கலன்கள் விரைவில் செயல்பட தொடங்கும்.
இப்போது உள்ள நிலையில் ஆலையில் 3 நாள்களுக்குத் தேவையான எரிவாயு உருளைகளை சேமித்து வைக்க முடியும். கூடுதல் சேமிப்புக் கலன்கள் செயல்பாட்டுக்கு வரும்போது கூடுதலாக 3 நாள்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளைகளை சேமித்து வைக்க முடியும். இங்கு 425 கிலோ கொள்ளளவு உருளையில் எரிவாயு நிரப்பும் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு வணிகப் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, ஆலை வளாகத்தில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டல தொடா்பு மேலாளா் ராஜசேகா் ராஜாராம், இன்டேன் எல்.பி.ஜி. ஈரோடு மண்டல மேலாளா் சுகன்யா மற்றும் ஆலை அலுலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

