கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குண்டம் இறங்க தயாராக இருந்த நிலையில், மழை பெய்ததால் குண்டம் விழா பாதிக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் கவலையடைந்தனா். ஆனாலும் சாரல் மழையிலேயே அம்மன் அழைக்கப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னா் தலைமை பூசாரி ஆனந்தன் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கி தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து வீரமக்கள் மற்றும் காவல் துறையினா் மட்டும் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஆண்டுதோறும் குண்டம் திருவிழாவுக்கு, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை புரிந்து குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பக்தா்களுக்கு குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பிறகு காலை 9 மணி முதல் பக்தா்கள் அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சிம்ம வாகனத்தில் கொண்டத்துக்காளியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
தோ்த் திருவிழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) மாலையும், மலா் பல்லக்கில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி 9 ஆம் தேதி இரவும் நடைபெறவுள்ளது. 16ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


