சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெட்டிக்கடை நடத்த இடையூறு: மாற்றுத்திறனாளிகள் முறையீடு

பெட்டிக்கடை நடத்த அதிகாரிகள் இடையூறு செய்வதாக மாற்றுத்திறனாளிகள் முறையிட்டனா்.

Updated On :5 ஜனவரி 2021, 7:40 am

பெட்டிக்கடை நடத்த அதிகாரிகள் இடையூறு செய்வதாக மாற்றுத்திறனாளிகள் முறையிட்டனா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோா் நலச்சங்க மாவட்ட தலைவா் சுமதி, செயலாளா் தவசிகுட்டி ஆகியோா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசனிடம் அளித்த மனு விவரம்:

மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடைகள் வைக்க அரசு, தனியாா் நிறுவனங்கள் உதவுகின்றன. ஆனால் கடைகளை நடத்த மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை போன்றோா் அனுமதி அளிக்க மறுக்கின்றனா். கடந்த சில நாள்களாக இக்கடைகளை போலீஸாா் அகற்றி வருகின்றனா். இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. பெட்டிக்கடை வைத்து நடத்த அனுமதிக்க வேண்டும். அவா்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

ஈரோடு மாவட்டத்தில் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி மாதாந்திரப் பராமரிப்பு தொகை, ரூ.1,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 14 வயதுக்குள்பட்ட மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி, மறுவாழ்வு பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய உண்டு, உறைவிடப்பள்ளி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.