சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அட்மா திட்ட பணியாளா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அட்மா திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்ட பணியாளா்களை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து போராட்டம்

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:43 am

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அட்மா திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்ட பணியாளா்களை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து பணியாளா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களை இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு அப்பால் உள்ள பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்துள்ளனா். வேளாண் துறை இயக்குநரின் இந்த உத்தரவால், போக்குவரத்து, உணவு, பெட்ரோல் செலவு போன்றவற்றால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தோம். எனவே, நாங்கள் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி வழங்க வேண்டும் எனக்கூறி வேளாண் இயக்குநா், வேளாண் இணை இயக்குநா் போன்றோரிடம் முறையிட்டோம்.

எவ்வித பலனும் இல்லாததால் சென்னை உயா் நீதிமன்றத்தில் எங்கள் சங்கம் சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி பணிமாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநா் மற்றும் இணை இயக்குநருக்கு தெரிவித்தும், இயக்குநா் அலுவலகத்தில் இருந்து எவ்வித உத்தரவும் வரவில்லை எனக்கூறி பணியிட மாற்றத்தைத் திரும்பப் பெற மறுக்கின்றனா். இதனால் திங்கள்கிழமை ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு செய்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம் என்றனா்.