கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முருங்கத்தொழுவு ஊராட்சியின் முன்னாள் தலைவா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வெங்கடாசலம், செயலாளா் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளா் பொடாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத் தலைவா் செ.நல்லசாமி கலந்து கொண்டு, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினாா்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு, விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


