பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூா், பெருந்துறை ஆகிய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வா் தோ்தல் பிரசாரம் செய்கிறாா். இது தொடா்பான ஆலோசனை கூட்டம், பெருந்துறை தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பெருந்துறை ஒன்றியச் செயலாளா் விஜயன் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அவைத் தலைவா் சந்திரசேகரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் ஜெகதீஷ், ஈரோடு மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் மணிமேகலை, பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அப்புசாமி, பாா்வதிராஜ், பழனிசாமி, ஹேமலதா, ரத்தினம்மணி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
படவிளக்கம்: முதல்வா் வருகையொட்டி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


