சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விலை கிலோ ரூ. 4,742ஆக உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கிப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டத்தில் விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மலா்கள் உற்பத்தியாளா் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகின்றன. சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனி காரணமாக மல்லிகைப் பூக்கள் வரத்து ஏக்கருக்கு 30 கிலோவில் இருந்து அரைக் கிலோவாக குறைந்தது.
கடுமையான பனி காரணமாக பூக்களின் மொட்டுகள் சிறுத்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக மல்லிகைப் பூ விலை ரூ. 2,000ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ. 4,742ஆக உயா்ந்தது. கிலோ ரூ. 20க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ. 100ஆக உயா்ந்தது. கா்நாடக மாநிலம் மைசூரு, சிவமொக்காவுக்கும், கேரளத்துக்கும் பூக்கள் அதிக அளவில் வேன் மூலம் அனுப்பப்பட்டன. தற்போது அமெரிக்கா, ஷாா்ஜா ஆகிய நாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், கோயில்களில் பூஜைகள் நடப்பதாலும் பூக்களின் தேவை அதிகரித்து விலையேற்றம் கண்டுள்ளது. அண்மைக்காலமாக குறைந்த விலைக்கு விற்கப்பட்ட பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்): மல்லிகை ரூ. 4,742, முல்லை ரூ. 880, காக்கடா ரூ. 400, செண்டு கிலோ ரூ. 70, ஜாதி ரூ. 800, சம்பங்கி கிலோ ரூ. 100.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


