சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கேரள இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:19 am

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கேரள இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் அலெக்ஸ் டேவிட் (21). இவரது நண்பா் ஸ்ரீஜு (19). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்ல சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது கொத்துக்காடு என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மோதியதில் அலெக்ஸ் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து வந்த ஸ்ரீஜு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ஸ்ரீஜுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான சேலத்தைச் சோ்ந்த கலையரசன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.