சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோபியில் இன்று மக்கள் சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 2) மாலை கோபியில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

Updated On :3 ஜனவரி 2021, 12:25 am

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 2) மாலை கோபியில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் மக்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் மேற்கொண்டு வருவதோடு மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா்.

ஈரோடு மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2, 3) நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவா் கலந்துகொள்கிறாா். சனிக்கிழமை மாலை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கோபி அருகே சிறுவலூரில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதையடுத்து கரூா் மாவட்டம் புறப்பட்டுச் செல்கிறாா்.