ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி தொடர் 100 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. 100வது நாளை நளதமயந்தி குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை நளதயமந்தி குழுவினர் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நளதயமந்தி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை பிரியங்கா நல்காரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரோஜா தொடரில் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்தவர். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீத ராமன் தொடரில் நடித்தார்.

கேக் வெட்டி கொண்டாடிய நளதமயந்தி குழுவினர்

இன்ஸ்டாகிராம்

திருமணத்திற்காக அந்தத் தொடரிலிருந்து விலகிய பிரியங்கா, நளதயமந்தி தொடர் மூலம் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இதனால் நளதயமந்தி தொடருக்கு ஆரம்பக்கட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்பின் காரணமாக நளதமயந்தி தொடர் பலதரப்பட்ட மக்களிடம் சென்று சேர்ந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், முதன்மை டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக நளதயமந்தி உள்ளது.
நளதயமந்தி தொடரில் பிரியங்கா நல்காரிக்கு ஜோடியாக நடிகர் நந்தா நடிக்கிறார். அம்மாவின் பெயரில் உணவகம் நடத்திவரும் நடுத்தரக் குடும்பத்து பெண்ணுக்கும், உணவுத் துறையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ஆணுக்கும் இடையிலான உறவை நளதயமந்தி தொடரின் திரைக்கதை.

நள தயமந்தி 100வது நாள் கொண்டாட்டம்

இன்ஸ்டாகிராம்

இந்தத்தொடர் தற்போது 100 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. இதனை குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi