இந்திய கடலோர காவல்படையில் நிரப்பப்பட உள்ள 358 Navik மற்றும் Yantrik பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Navik (General Duty)
காலியிடங்கள்: 260
சம்பளம்: மாதம் ரூ.21,760
வயதுவரம்பு: 01.08.1999 - 31.07.2003-க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Navik (Dimestic Branch)
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 01.10.1999 - 30.09.2003-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Yantrik
காலியிடங்கள்: 48
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 01.08.1999 - 31.07.2003-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மார்ச் 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை நான்கு கட்டங்களாக நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://joinindiancoastguard.cdac.in/assets/img/downloads/advertisenment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2021
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


