சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கிளார்க் பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள

Updated On :1 ஆகஸ்ட் 2013, 10:00 pm

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை Staff Selection Commission நடத்தும் Combined Higher Secondary Level Examination என்கிற தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை SSC அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.11.2013 மற்றும் 17.11.2013

தேர்வின் பெயர்: Combined Higher Secondary Level Examination-2013

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வி அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: +2 முடித்திருக்க வேண்டும். மேலும் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 கீ அழுத்த வேகத்தில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினியில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை - கோடு எண்- 8201, கோயம்புத்தூர் - 8202, மதுரை - 8204, திருச்சிராப்பள்ளி - 8206, திருநெல்வேலி - 8207, புதுச்சேரி - 8401.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: இரு முறைகளில் விண்ணப்பிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை www.ssc.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி அஞ்சலில் விண்ணப்பித்தல். அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல்.

மேலும் எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.