சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரியார் பல்கலையில் உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :1 ஏப்ரல் 2013, 6:13 pm

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம்: உதவி பேராசிரியர் (Botany, Environmental Science, Library and Information Science, Zoology)

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டப் படிப்பில், இணையான பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NET, SLET, SET ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினருக்கு 5 சதவீத தளர்வு அளிக்கப்படும்.

பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள் NET, SLET, SET ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

விண்ணப்ப படிவங்களை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250ம் வரைவோலை எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.periyaruniversity.ac.in/files/AP1.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.