அறிவுதான் தெய்வம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற பாரதியார் விழாவில் அவர் பேசியது:
இன்றைய இளைஞர்கள் பாரதியாரின் தேசப்பற்றையும், சமுதாய நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மனதைத் தெளிவான பாதையில் வழிநடத்த வேண்டும். பொதுவாக, நாம் கடவுளை வழிபடும்போது பொன் வேண்டும், பொருள் வேண்டும் அல்லது ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டுகிறோம். ஆனால் பாரதியார் அறிவில் தெளிவும், நெஞ்சில் துணிவையும், ஐம்புலன்கள் மீது சுயகட்டுப்பாடும் வேண்டுமென்று கடவுளிடம் கேட்டார். இதுதான் சாதாரண மனிதர்களுக்கும் மகாகவிக்கும் உள்ள வித்தியாசம்.
ஆயிரம் தெய்வங்களைத் தேடும் ஆறறிவு பெற்ற மனிதர்கள், அறிவுதான் தெய்வம் என்று உணர வேண்டும். பாரதியார் எழுதிய கவிதைகளில் "தேடிச்சோறு நிதம் தின்று..' என்று தொடங்கும் கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் புத்துணர்வு பிறக்கும். "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..' என்று முடியும் அந்த கவிதை நம்மை எழுச்சி பெறச் செய்யும். மகாகவி பாரதியார் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்றார் ராமசுப்பிரமணியன்.
கோவை கங்கா மருத்துவமனையின் நிர்வாகி ஜே.ஜி. சண்முகநாதனுக்கு பாரதியார் விருதும், தியாக துருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழ்ப்பணியாற்றி வரும் சா.சுப்பிரமணியன், பேராசிரியர் அர்த்தநாரீசுவரன் ஆகியோருக்கு "பாரதி புகழ் பரப்புநர்' பட்டயமும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் மகள் டாக்டர் மணிமேகலை கண்ணன், எத்திராஜ் கல்லூரி முதல்வர் ஜோதி குமாரவேல், பரத நாட்டியக் கலைஞர் பார்வதி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு "பாரதி கண்ட புதுமைப்பெண்' விருதும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் உலகநாயகி பழனி எழுதிய, "எட்டையபுரத்து எரிமலை', சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் யு.எம்.கண்ணன் தயாரித்த, "பாரதியின் பாஞ்சாலி சபதம்' சி.டி ஆகியவை வெளியிடப்பட்டன.
பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, துணைத்தலைவர்கள் மேஜர் ராஜா, டி.கே.எஸ்.கலைவாணன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


