சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 10:01 pm

கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு முதல் விடிய விடிய மழை கொட்டுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், திட்டமிட்ட படி +1, +2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.