திருவண்ணாமலையில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முடிவடைந்துள்ளன. மாணவ-மாணவியர்களுக்கான விடுதி வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
மாணவர் சேர்க்கை: மொத்தமுள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் தமிழக ஒதுக்கீடான 85 இடங்களில் மாணவ-மாணவியர் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவக் கல்லூரியைத் திறந்து வகுப்புகளை நடத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அதன்படி, மருத்துவக் கல்லூரி திறப்பு விழா இன்று காலை நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இந் நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


