காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக பொறியியல் கல்வி வழங்கப்படுகிறது. இதற்கான விழா அண்மையில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்துச் செலவு இறுதியாண்டு வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கைப் பிரிவில் சேர 500 விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
கிரிக்கெட், ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து, செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்றனர்.
இறுதியாக 104 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் தேசிய மற்றும் சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரர்கள் ராகுல்ராஜ்,பிரசாந்த், கிரிக்கெட் வீரர் மார்ட்டீன் சஞ்சீவ், செஸ் விளையாட்டு வீரர்கள் எஸ்.பி.சேதுராமன், அபிலாஷ் ரெட்டி, கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆர்.எஸ்.கற்பகம் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
104 விளையாட்டு வீரர்களுக்கும் ரூ.2 கோடியே14 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து வழங்கினார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, பதிவாளர் என்.சேதுராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

