சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அழகப்பா பல்கலை: நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பில் சேர, தகுதியானவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On :12 மார்ச் 2013, 4:29 pm

அழகப்பா பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பில் சேர, தகுதியானவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ.,  எம்.பி.ஏ.,(பேங்கிங் அன்ட் இன்சூரன்ஸ்), எம்.பி.ஏ., (கார்பரெட் செக்ரெடரி, இன்டர்நேஷ்னல் பிசினஸ்), எம்.சி.ஏ., எம்.எஸ்சி.,பயோ-டெக்னாலஜி, பி.இஎட், எம்.இஎட், ஆகிய படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது.

எம்.பி.இஎட், பி.பி.இஎட்., டி.பி.இஎட்., ஆகிய தேர்வுகளுக்கு மருத்துவ தேர்வு,  உடல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.alagappauniversity.ac.in என்ற இணையதளதிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம் (எஸ்சி., எஸ்டி) பிரிவினர் ரூ.250ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நுழைவுத்தேர்வு இல்லாதவர்களுக்கு ரூ.300ம் (எஸ்சி, எஸ்டி., பிரிவினருக்கு ரூ.150ம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பகளை சமர்ப்பிக்க ஏப்ரல் 19ம் தேதி கடைசி நாளாகும். நுழைவுத்தேர்வு எழுதாதவர்கள் விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி:

எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ, மாணவர்களுக்கு: ஏப்ரல் 28

பி.எட்., எம்.எட்., நுழைவுத்தேர்வு: மே 5

நேர்முகத்தேர், குழுகலந்துரையாடல், மருத்துவத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, நடைபெறும் தேதி குறித்த விவரங்களை அவரவரது வீட்டு முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு அழகப்பா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.