சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தண்டவாளத்தில் கார் சிக்கியதால் ரயில் சேவையில் பாதிப்பு

தில்லியில் தயபஸ்தி - சக்குர்பஸ்தி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை

Updated On :12 செப்டம்பர் 2013, 4:28 pm

தில்லியில் தயபஸ்தி - சக்குர்பஸ்தி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கார் சிக்கிக் கொண்டதால் அப்பகுதி வழியாக ரயில்களை இயக்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தடங்கல் ஏற்பட்டது.

இதனால், சென்னை - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் தயபஸ்தி ரயில் நிலையத்தில் அதிகாலை 12.52 மணி முதல் 2. 28 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டது என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 12.45 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தில் டாடா சஃபாரி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. கார் ஓட்டுநரின் கவனக் குறைவால் இது நேர்ந்தது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். சிக்கிய கார் தண்டவாளத்தில் இருந்து காலை 2.10 மணிக்கு அகற்றப்பட்டது.

இது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.