சாட்சிகள் அச்சமின்றி பாதுகாப்பு உணர்வுடன் சாட்சியம் அளிக்கும் சூழலை நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தினார்.
தில்லி கட்கர்டூமா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்குகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் நீதிமன்றத்தில் பாதுகாப்புடன் ஆஜராகும் வசதிகள் அடங்கிய புதிய நீதிமன்ற வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வளாகத்தைத் திறந்து வைத்து தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியது:
"குற்றவியல் நீதி அமைப்பில் சாட்சிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவரும் அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க நீதிமன்றத்துக்கு வருவோரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உண்மையை வெளிக்கொண்டு வருவதில் அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உறுதுணையாக உள்ளனர்.
குற்றத்தை நேரில் பார்வையிட்ட பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், நீதிமன்றத்துக்கு சாட்சிகள் வந்தால் அவர்கள் ஒழுங்காக நடத்தப்படுவதில்லை. எங்கு செல்வது? நீதிமன்ற அறையில் எங்கு உட்காருவது என்பதைக்கூட அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர். அவர்கள் சரியாகவும் வழிநடத்தப்படுவதில்லை. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் இந்த அவலத்தை எதிர்கொள்கின்றனர்.
இதன் விளைவாக உயிருக்கும் குடும்ப பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை என்ற அச்சத்தில் அவர்கள் பிறழ் சாட்சியாக மாறுவதால் குற்றவாளிகள் தப்பிக்கவும் காரணமாகி விடுகின்றனர்.
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சாட்சிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் முக்கியமாகும்.
நீதிமன்றத்துக்கு வருவது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சாட்சிகள் கருதினால் உண்மையை வெளிப்படுத்த எவரும் முன்வர மாட்டார்கள்.
இதேபோல, நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படும் வழக்கு விசாரணை, நீதித் துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்கச் செய்துவிடும்.
நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, வெளிப்படையான விசாரணை, சாட்சிகள் அச்சமின்றி, பாதுகாப்பு உணர்வுடன் சாட்சியம் அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு நீதிபதியின் கடமை. அதே போல, ஒரு வழக்கை விசாரித்து விரைவாகத் தீர்ப்பு அளிக்க வழக்குரைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ரமணா.
உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், தில்லி உயர் நீதிமன்ற மேற்பார்வையுடனும் முக்கியச் சாட்சிகள் ஆஜராக வசதியாக கட்கர்டூமா நீதிமன்ற வளாகத்தில் புதிய வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் இனி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்படுவோர், குழந்தை சாட்சிகள் ஆஜராவர்.
இந்த வளாகத்தில் குழந்தைகள் சாட்சியம் அளிக்க தனியாக ஒரு நீதிமன்ற அறையும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் சாட்சிகள் நீதிபதி முன்பு ஆஜராகும் வகையில் தனித்தனி அறைகள் விடியோ கான்ஃபரன்சிங் வசதியுடன் உள்ளன.
மாற்றுத் திறனாளிகள் நீதிமன்ற அறைக்கு வரும் வகையிலும் மேடை ஏறும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

