காஜியாபாத் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கடைகளில் சோதனை நடத்தச் சென்ற போலீஸார் தாக்கப்பட்டனர்.
அதில் காஜியாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அமித் நாகர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர். காஜியாபாதை அடுத்த பிகுவா பகுதியில் டி.எஸ்.பி. அமித் நாகர் தலைமையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
சந்தேகத்துக்கிடமான ஒரு கடையை சோதனையிட்ட போது, போலீஸார் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
செங்கல், மரக்கட்டைகள், இரும்புத் தடிகள் ஆகியவற்றால் தாக்கி, பிறகு துப்பாக்கியால் சுட்டுவிட்டு அக்கும்பல் தப்பியது.
தகவல் அறிந்த காஜியாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் ராகவ் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
காயமடைந்த டிஎஸ்பி அமித் நாகர் உள்பட 4 போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயக் கும்பலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

