"தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுக்கு தலித் அந்தஸ்துக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுக்கு தலித் அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோப்பு நீண்ட காலமாக அரசிடம் நிலுவையில் உள்ளது.
அது தொடர்புடைய அமைப்புகள் சார்பில் ஏராளமான மனுக்கள் அனுப்பப்பட்டும்கூட அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், "மற்ற ஜாதியினருடன் ஒப்பிடுகையில், தலித் கிறிஸ்தவர்களும், தலித் முஸ்லிம்களும் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்கராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக எம்.பி. கோரிக்கை: தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பிரிவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தென்சென்னை தொகுதி அதிமுக உறுப்பினர் சி. ராஜேந்திரன் வலியுறுத்தினார்.
மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், "தலித் கிறிஸ்தவர்கள் தங்களை எஸ்.சி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், "அரசியலமைப்பு (எஸ்.சி.) உத்தரவு 1950'-இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அவர் கோரியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

