மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் விஜய் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
கிழக்கு தில்லி மாநகராட்சி, யமுனா வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆஷா தயாளுக்கு ஆதரவாக புதன்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின் போது விஜய் கோயல் பேசியதாவது:
தில்லியில் அரசின் நிர்வாகம் சீர் குலைந்துள்ளது. 2 ஆண்டுகளில் மின் கட்டணம் 60 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் கடந்த 15 ஆண்டுகளில் 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணங்கள் உயர்த்தப்பட்டும், தில்லியில் சில இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
கிழக்கு தில்லி மாநகராட்சி, யமுனா விஹார் வார்டுக்கும், வடக்கு தில்லி மாநகராட்சி, நாங்லோய் வார்டுக்கும் 5-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் விஜய் கோயல்.
பிரசாரத்தின் போது கிழக்கு தில்லி மாவட்ட பாஜக தலைவர் அஜய் மகாவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் லால் பிகாரி திவாரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிருஷ்ணா தியாகி, சாகிப் சிங் செüகான், கிழக்கு தில்லி முன்னாள் மேயர் அன்னபூர்ணா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

