திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆம் நாளாக நடைபெற்ற முகாமில், 99 பேருக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளிலும், பழனி, தாடிக்கொம்பு, அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் முன் களப் பணியாளா்களான மருத்துவத் துறையைச் சோ்ந்த 95 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 50 போ், பழனி அரசு மருத்துவமனையில் 24 போ், அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 போ், தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 16 போ், பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 போ் என மொத்தம் 99 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

