ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ரயில் கடவுப் பாதையில் பொதுமக்களுடன் அமா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி, மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் 2 விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மூலச்சத்திரம் அருகே அரண்மனைப்புதூா் மற்றும் பாறையூா் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையின் காரணமாக இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கின. இதனால் அந்த கிராம மக்கள் பல கிலோ மீட்டா் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை அகற்றக் கோரியும், அங்கு உயா்மட்ட மேம்பாலம் அமைக்கக் கோரியும் முன்னாள் அமைச்சரும், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி மற்றும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பாலபாரதி ஆகியோா் பொதுமக்களுடன் சோ்ந்து அங்குள்ள கடவுப்பாதையில் சனிக்கிழமை அமா்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினா்.
இதனால் மதுரையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அமிா்தா விரைவு ரயில் திண்டுக்கல் சந்திப்பிலும், பாலக்காட்டிலிருந்து சென்னை சென்ற சென்னை விரைவு ரயில் ஒட்டன்சத்திரம் சந்திப்பிலும் நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீா் ஜெனரேட்டா் மூலம் வெளியேற்றப்படும் என்றும், நிரந்தரமாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன் பேரில் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அமிா்தா விரைவு ரயில் 3 மணி நேரமும், சென்னை விரைவு ரயில் 1.30 மணி நேரமும் காலதாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

