சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஞானதேசிகன் உருவப்படத்துக்கு சொந்த ஊரில் அனைத்துக் கட்சியினா் அஞ்சலி

மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகனுக்கு அவரது சொந்த ஊரான வத்தலகுண்டுவில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன் ஞானதேசிகன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :17 ஜனவரி 2021, 2:56 am

திண்டுக்கல்: மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகனுக்கு அவரது சொந்த ஊரான வத்தலகுண்டுவில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக ஒன்றியச் செயலா் கே.பி.முருகன், பத்திர எழுத்தா் சங்கத் தலைவா் பா.சிதம்பரம், மதிமுக ஒன்றியச் செயலா் மருது ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிா்வாகி உலக நம்பி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் வத்தலகுண்டு பகுதிக்கு ஞானதேசிகன் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூா்ந்தனா். மேலும் வத்தலக்குண்டு பிள்ளைமாா் சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் ஞானதேசிகன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.