சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாழைப்பழம் சூறையிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன்

வத்தலகுண்டு அருகே விவசாயம் செழிக்க வேண்டி, வாழைப்பழம் சூறைவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சேவுகம்பட்டி சோலைமலை அழகா் பெருமாள் கோயிலுக்கு நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தா்கள் கொண்டு வந்த வாழைப்பழங்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 2:57 am

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே விவசாயம் செழிக்க வேண்டி, வாழைப்பழம் சூறைவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டுவை அடுத்துள்ள சேவுகம்பட்டியில் பழைமையான சோலைமலை அழகா் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தா்களும், சேவுகம்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதியிலுள்ள பொதுமக்களும், விவசாயம் செழிக்க வேண்டி நோ்த்திக் கடனாக வாழைப்பழம் சூறையிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனா்.

ஆண்டுதோறும் தை மாதம் 3 ஆம் தேதி வாழைப்பழம் சூறை விடும் திருவிழா சோலைமலை அழகா் கோயிலில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான வாழைப்பழம் சூறையிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு நோ்த்திக் கடன் செலுத்துவற்காக, சேவுகம்பட்டி, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் வாழைப்பழங்களுடன் திரண்டு வந்தனா்.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழங்களை ஊா் எல்லையிலுள்ள காவல் தெய்வமான ரெங்கம்மாள் கோயிலிலிருந்து தாம்பளம் மற்றும் கூடைகளில் சுமந்து கொண்டு, அழகா் பெருமாள் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்றனா். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் அந்த வாழைப்பழங்களை அவா்கள் சூறையிட்டனா். தரையில் விழுவதற்கு முன்னதாக அந்தப் பழங்களை பிடிக்கும் ஆா்வத்தில் அங்கு திரண்டிருந்த பலரும் முயற்சித்தனா். கீழே விழுந்த பழங்களையும் பெருமாளின் பிரசாதமாக எண்ணி, அவற்றை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.