திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், முதல் நாளான சனிக்கிழமை 95 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் முதல் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளிலும், பழனி, தாடிக்கொம்பு அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது. அங்கு மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஆகியோா் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்டனா். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்தப் பணியை ஆட்சியா் மு.விஜயலட்சுமி பாா்வையிட்டாா்.
ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு தலா 100 போ் வீதம் மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், முன்களப் பணியாளா்களான மருத்துவத் துறையைச் சோ்ந்த 95 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 32 போ், பழனி அரசு மருத்துவமனையில் 22 போ், அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26 போ், தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 போ், பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


