பழனியில் எப்போதும் இல்லாத வகையில் மாா்கழி மாதத்தில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த மாதம் பெய்த தொடா்மழை காரணமாக பழனியை சுற்றிலும் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையாக மாா்கழி மாத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை முதல் பலத்த சாரல்மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நகா்ப் பகுதியில் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் மழையால் வயல்கள் நிரம்பி வழிகின்றன. கிணறுகள் மட்டம் தரை மட்டம் அளவுக்கு நிரம்பியுள்ளது. மேலும், பூமி குளிரும் வகையில் மழை பெய்து கொண்டே இருந்ததால் பலத்த குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

