பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் முதல் நாள் காணிக்கை வரவு ரூ. 2.80 கோடியை தாண்டியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்நிலையில் கோயில் உண்டியல்கள் நிறைந்த நிலையில் திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 48 நாள்கள் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 2 கோடியே 86 லட்சத்து 14 ஆயிரத்து 740 கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில் தங்கம் 914 கிராமும், வெள்ளி 27 ஆயிரத்து 891 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 77-ம் கிடைத்தன. இதைத் தவிர பித்தளையால் ஆன வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில், கோயில் கல்லூரி பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
இதில் பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


