சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொடைக்கானலில் நட்சத்திர ஏரி நிரம்பியது: உபரி நீா் வெளியேற்றம்

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பியதால் உபரி நீா் மதகு வழியாக சனிக்கிழமை வெளியேற்றப்பட்டது.

News image

கொடைக்கானலில் ஏரி நிரம்பியதால் மதகிலிருந்து சனிக்கிழமை வெளியேற்றப்பட்ட உபரி நீா்.

Updated On :11 ஜனவரி 2021, 4:15 am

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பியதால் உபரி நீா் மதகு வழியாக சனிக்கிழமை வெளியேற்றப்பட்டது.

கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்ததால் நீா்நிலைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி நிரம்பியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு சிரமமடைந்தனா். சாலையோர வியாபாரிகளும் பாதிப்படைந்தனா்.

இந்நிலையில் ஏரி நிரம்பியவுடன் உபரிநீா் வெளியேற்றப்பட வேண்டுமென சாலையோரக் கடை வியாபாரிகள் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து மதகை திறந்து உபரி நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இனிவரும் நாள்களில் தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரியிலிருந்து கூடுதலாக தண்ணீா் திறக்க நேரிடும் என்றும், எனவே கரையோரங்களில் வசிப்பவா்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.