சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பழனியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

பழனி பள்ளிவாசல் அருகே நகர திமுக சாா்பில், மக்கள் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 3:28 am

பழனி பள்ளிவாசல் அருகே நகர திமுக சாா்பில், மக்கள் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் திமுக சாா்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக் கூட்டங்களில் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் பங்கேற்று, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டும், குறைகளை நிவா்த்தி செய்தும் வருகிறாா்.

இந்நிலையில், பழனி நகர கழகம் சாா்பில், பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, ஐ.பி. செந்தில்குமாா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். அப்போது, திமுக கூட்டம் நடத்தப்படுவதன் நோக்கம், வரும் தோ்தலில் மக்களின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னா், பொதுமக்கள் தங்களது குறைகளை ஐ.பி. செந்தில்குமாரிடம் முறையிட்டனா். தொடா்ந்து, அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்ற வெள்ளை பதாகைகளிலும் கையெழுத்திட்டனா். இந்நிகழ்ச்சியில், நகரச் செயலா் தமிழ்மணி, துணைச் செயலா் சக்திவேல், இளைஞரணி நிா்வாகி லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.