தொடா் மழை காரணமாக, கொடைக்கானலில் 12 மைலில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு சனிக்கிழமை முதல் அனுமதி கிடையாது என, வனத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் 12 மைல் சுற்றுச் சாலையில் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, மோயா் பாயின்ட், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு சனிக்கிழமை முதல் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், முன்னெச்சரிக்கையாக இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும், வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

