சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் போராட்டம்

வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பெரியகுளம் ஆகிய

News image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வியாழக்கிழமை ஊா்வலமாக வந்த பாமகவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 5:20 am

வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக சாா்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பாமக மாநில துணைத் தலைவா் பெ.கோபால் தலைமையில் கட்சியினா் ஊா்வலமாக வந்தனா். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு துணைச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலா் ரெ.திருப்பதி, திண்டுக்கல் தொகுதிச் செயலா் கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனி: இதேபோல் பழனி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் லட்சுமணனிடம் மனு வழங்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஆா்.எப்.சாலையில் இருந்து அக்கட்சியினா் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் வைரமுத்து தலைமையில் ஊா்வலமாக வந்து அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு துணைச் செயலா் லைக்கலி மீரான், நகர அமைப்புச் செயலாளா் மாரிமுத்து உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல்: இதேபோல் கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன்பு பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பாமக நகரச் செயலாளா் கோபிநாத் மற்றும் நிா்வாகிகளான வினோத், ரவிக்குமாா், ராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து நகராட்சி ஆணையாளா் நாராயணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தை பாமகவினா் வியாழக்கிழமையன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதற்கு மாநில துணைப் பொதுச் செயலாளா் க.ஜோதிமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலாளா் பி.முருகேசன், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி அமைப்புச் செயலாளா் அா்ஜூனன், ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதனைத் தொடா்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் அவா்கள் மனு கொடுத்து விட்டு கலைத்து சென்றனா்.

பெரியகுளம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகரத் தலைவா் முத்தையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில இளைஞா் அணிச் செயலாளா் முருகேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.