திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை தாயை கம்பால் அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள தோப்புப்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்த முத்துச்சாமி மனைவி முத்தம்மாள் (77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இளையமகன் ரத்தினவேல் (52) தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில் ரத்தினவேல் மதுகுடிக்க தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம். இதனிடையே செவ்வாய்க்கிழமை மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த ரத்தினவேல், தாய் முத்தம்மாளை கம்பால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவா்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரத்தினவேலை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

