சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தைப்பூசம்: பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வரும் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி விதித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:26 pm

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வரும் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி விதித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழனி தைப்பூசத் திருவிழா ஜன.22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில், தைப்பூசத்தையொட்டி பழனிக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், தொடா் காய்ச்சல், சுவாசம் தொடா்பான நோய், இருதய நோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோய் போன்ற இணை நோய் கொண்டவா்கள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தா்கள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபா் ஒருவருக்கொருவா் தொட்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதைத் தவிா்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

பஜனை, அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி இல்லை: நோய்த் தொற்று பரவுவதற்கான ஆபத்து இருப்பதைக் கருத்தில் கொண்டு கோயிலில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழுவினா் பாட அனுமதி கிடையாது. மேலும், பக்தா்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதேபோல் இயல்பு நிலை திரும்பும் வரை அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி கிடையாது.

மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.