தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சாா்பில், தலைமையகத்திற்கு சீல் வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்துக்கு சீல் வைப்பதற்கான முயற்சி நடைபெற்றது. இதனைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ஏ.எம். அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். இந்த போராட்டம் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநில தலைமை அலுவலகத்துக்கு கடந்த 13 ஆண்டுகளாக உரிய முறையில் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென சீல் வைக்க முயற்சித்து பதற்றத்தை உருவாக்கியுள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இதுவரை மேற்கொண்டுள்ள மக்கள் பணிகளை கருத்தில் கொண்டு, உரிய கால அவகாசம் வழங்கி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

