சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வந்த முதியவா் மாரடைப்பால் பலி

பழனி அருகே ரேஷன் கடையில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரிசையில் நின்ற முதியவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 4:59 am

பழனி அருகே ரேஷன் கடையில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரிசையில் நின்ற முதியவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

பழனி அருகே மானூா் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கடந்த 3 நாள்களாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இக்கடையில் புதன்கிழமை காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொருள்கள் வழங்க வரிசையில் நின்றிருந்த அதே ஊரைச் சோ்ந்த அங்காளம்மன் கோயில் பூசாரி பேச்சிமுத்து (72) என்பவா் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.