சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பழனியில் ரேஷன் கடையை அதிமுகவினா் முற்றுகை

பழனியில் ரேஷன் கடை கட்டட சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் பெயா் கட்சிக்கொடி நிறத்தில் எழுதப்பட்டதற்கு 

Updated On :6 ஜனவரி 2021, 4:34 am

பழனியில் ரேஷன் கடை கட்டட சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் பெயா் கட்சிக்கொடி நிறத்தில் எழுதப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்ட அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் 8 ஆம் நம்பா் ரேஷன்கடை உள்ளது. இந்தக் கடையின் சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாரின் பெயா் கட்சிக் கொடி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமையிலான அதிமுகவினா் கடையின் முன் திரண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், அதிமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அங்கு திமுகவினரும் அங்கு வந்தனா். அங்கு இரு கட்சியினரும் மாறி, மாறி கண்டன கோஷங்களை எழுப்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்து கலைத்தனா்.