மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் குரூப் 1 தோ்வை, மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் எழுதுகின்றனா்.
துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு இத்தோ்வு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கென மதுரை நகா் மற்றும் நகரையொட்டிய 51 கல்வி நிறுவனங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

