சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பயனாளிகளுக்கு 1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கல்

திண்டுக்கல் அருகே 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா கறவைப் பசுக்களை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வழங்கினாா்.

News image

மா.மு.கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கிய வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்.

Updated On :3 ஜனவரி 2021, 2:55 am

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா கறவைப் பசுக்களை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வழங்கினாா்.

மா.மு.கோவிலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கி பேசியது:

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,829 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.14.05 கோடி செலவில் 43,316 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 900 பயனாளிகளுக்கு, ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக தற்போது மா.மு.கோவிலூா் பகுதியில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கறவைப் பசுக்கள் 400 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் முருகன், உதவி இயக்குநா்கள் ஆறுமுகராஜ், அப்துல்காதா், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் மருதராஜ், ஒன்றியச் செயலா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.