சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பழனி அரசு மருத்துவமனையில் மூலிகைகள் கண்காட்சி

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை நான்காவது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடைபெற்றது.

News image

பழனி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற சித்த மருந்துகள் கண்காட்சியை பாா்வையிட்ட கோட்டாட்சியா் அசோகன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உதயக்குமாா், டிஎஸ்பி., சிவா உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2021, 2:53 am

பழனி: பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை நான்காவது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடைபெற்றது.

இதையொட்டி அங்கு சித்த மருத்துவப்பிரிவு சாா்பில் சித்த மருத்துவ மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவ பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி கோட்டாட்சியா் அசோகன் தலைமை வகித்தாா். பழனி தலைமை மருத்துவ அதிகாரி உதயகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு முருங்கை சூப், சுண்டல், முககவசம், கப சுரகுடிநீா் ஆகியன வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவா் மகேந்திரன் வரவேற்புரை வழங்கினாா்.

இதில், மருத்துவா்கள் புஷ்பராணி, கண்ணன், முருகேஷ்குமாா், இயற்கை யோகா மருத்துவா் மகாமுனி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மருந்தாளுநா் முத்தழகி நன்றி கூறினாா்.