வேடசந்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சின்னக்காளை (47). இவா், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை பணி முடிந்து, நள்ளிரவு நேரத்தில் வேடசந்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
திண்டுக்கல்-கரூா் நான்குவழிச் சாலையில் லட்சுமணம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சாலை மைய தடுப்புச் சுவரில் மோதியதில், சின்னக்காளை பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


