பழனி அருகே புதன்கிழமை மினி வேன் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்ரன் மகன் பழனிச்சாமி(45). இவரும் பொன்னாபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் மகன் ராமசாமி (60), டிகேஎன் புதூரை சேர்ந்தச் பழனிச்சாமி மகன் ரவி (30) ஆகியோர் தோட்டத்துக்கு வேலி அமைக்க கான்கிரீட் நிலை வாங்க வயலூருக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்று கான்கிரீட் நிலைகளை வாங்கிக் கொண்டு மினி வேனில் ஏற்றிக் கொண்டு பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேனை டிகேஎன் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் கருப்புச்சாமி ஓட்டி வந்துள்ளார். வேன் பழனி-உடுமலை சாலையில் பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்தபோது சாலையில் குறுக்கே நாய் ஓடியுள்ளது. இதனால் டிரைவர் கருப்புச்சாமி திடீர் பிரேக் போட்டதால், வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் அமர்ந்திருந்த பழனிச்சாமி, ராமசாமி, ரவி ஆகியோர் வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் மீது கான்கிரீட் நிலைகள் விழுந்துள்ளன. இதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேன் டிரைவர் கருப்புச்சாமி காயமின்றி தப்பினார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

