சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளியில் பெற்றோர் தின விழா

கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளியில், 29 ஆவது ஆண்டு பெற்றோர் தின விழா நடைபெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:20 pm

கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளியில், 29 ஆவது ஆண்டு பெற்றோர் தின விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பள்ளித் தாளாளர் சாம்பாபு தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவரும், கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்துப் பேசினார். பள்ளி உதவித் தாளாளர் ரோகன் சாம்பாபு வரவேற்றார். பள்ளி முதல்வர் மைக்கேல் ஜோஸ்வா ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்ச்சியில், பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான பரிசுகளை, மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் தவமணி கிறிஸ்டோபர் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இந் நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி நிர்மலா சாம்பாபு மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.