"பழைய வண்ணாரப்பேட்டை', "திரெளபதி' படங்களின் இயக்குநர் மோகன் ஜி அடுத்து "ருத்ரதாண்டவம்' என்ற பெயரில் படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகனாக "திரெளபதி' படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார். மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பரப் படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் தர்ஷா குப்தாவிற்கு இப்போது முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமூகவலைதளங்களில் பரபரப்பாக கருத்துக்களை பதிந்து வரும் இவர், , எப்போதும் கவர்ச்சியாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தர்ஷா குப்தா பேசும் போது...
"ருத்ரதாண்டவம்' படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. "திரௌபதி' வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்தப் படமாக உருவாக இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்தப் படத்தில் நான் கதாநாயகியாக இடம் பிடித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும், என் சினிமா பயணத்தில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் படத்தில் இருப்பது சந்தோஷம்'' என்று தெரிவித்துள்ளார் தர்ஷாகுப்தா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


