சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பேல்பூரி

என்ன புண்ணியமோ? வாசலில் கையேந்தி நிற்கும்

Updated On :2 ஜூன் 2013, 12:07 am

கண்டது

(தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி அருகே உள்ள ஊர் ஒன்றின் பெயர்)

நல்லமுடிபட்டி

சி.செல்லமுத்து, மேல்மங்கலம்.

(கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் ஓர் ஓட்டலின் முன்பு நின்றிருந்த காரின் பின்புறத்தில்)

என்ன புண்ணியமோ?

வாசலில் கையேந்தி நிற்கும்

பார்வையற்றவனைக்

கடந்துபோய்...

கோயில் உண்டியலில்

போடும் பணத்தால்!

அ.விசுவநாதன், பெரியமுத்தூர்.

(தூத்துக்குடியில் ஒரு சிற்றுந்து நிறுத்தத்தின் பெயர்)

அலங்காரத்தட்டு

எம்.செல்லையா, சாத்தூர்.

(பொள்ளாச்சி சக்தி நகர் சுவர் ஒன்றில் கண்ட கிறுக்கல்)

தூக்கத்தில் வருவது கனவல்ல...

தூங்கவிடாமல் செய்வதே கனவு

பீ.ஆர்.பூஜாரமேஷ், பொள்ளாச்சி-2.

(மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்குச்

செல்லும் வழியில் கண்ட விளம்பரம்)

உங்கள் கண்ணீரால் எதுவும்  செய்ய முடியாது

ஆனால்

உங்கள் இரத்தம் நான்கு உயிர்களைக்  காப்பாற்றும்.

ஆர்.ஆரோக்கியமேரி, மதுரை-9.

கேட்டது

(நாகர்கோயில் பேருந்துநிலையத்தில் ஒரு பெரியவரும் அவருடைய உறவுக்கார இளைஞரும்)

""தம்பி இப்போ என்ன படிக்கிறாய்?''

""ஃபைனல் இயர் பி.காம் படிக்கிறேன்''

""அடுத்து என்ன செய்யப் போகிறாய்?''

""அரியர் பேப்பர்களுக்குப் படிக்கணும்''

சு.நாகராஜன், பறக்கை.

(நாகர்கோயில் மேலரத வீதியில் குடிகாரக் கணவனும் மனைவியும்)

போதையில் வரும் கணவனைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்ட மனைவியிடம் கணவன்: என்னடி... முகத்தில் இருந்த மூக்கு, காது, வாய் எதையுமே காணலை?

மனைவி (முகத்தைத் திருப்பியபடி) : ஆமா.. இவரு வந்திருக்காருன்னு தெரியணுமாம்... பின்னாடி நின்னு மூக்கையும் வாயையும் தேடுறாரு... தைரியம் இருந்தா முன்னாடி வந்து நின்னு பேசுமே... பார்ப்போம்.

த.ஜெகன், சரலூர்

(வேலூர் சின்ன அல்லாபுரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தினர் வீட்டில்)

மகன்: அப்பா... காலேஜுக்கு போகப் போறேன். எனக்கு டூ வீலர் வாங்கித் தாங்க

அப்பா: உன் வயசுலயெல்லாம் நான் 5 மைல் நடந்துபோய் படிச்சேன் தெரியுமா... நடப்பது உடம்புக்கு ரொம்ப நல்லது

அம்மா: காலேஜுக்கு நீங்க நடந்து போனது அரைக்கால் டவுசர் போட்டுட்டு... மஞ்சள் பையைக் கொண்டு போனதுன்னு நீங்களே உங்க மானத்தை வாங்கறீங்க. பேசாமல் பையன் கேட்கறதை வாங்கிக் கொடுங்களேன்''

வெ.ராம்குமார், வேலூர்.

(சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகில் இரு நண்பர்கள்)

""உன் போக்கிலே போ... உன் வழியில் யோசி... நீ விரும்பியதைச் செய்னு சொற்பொழிவுல சாமியார் ஒருவர் சொன்னதைப் ஃபாலோ பண்றேன்... ஆனால் எல்லாரும் என்னை அதுக்காகத் திட்டுறாங்கடா''

""என்ன சொல்லித் திட்டுறாங்க?''

""தறுதலை யார் பேச்சையும் கேக்காமத் திரியுது பாருன்னு திட்டுறாங்க''

ஜி.ஏ.தாஸ், சென்னை-32.

உதிர்ந்த முத்து

சென்னை சிட்டியில் குடியிருக்கலாம்

பெங்களூர் சிட்டியில் குடியிருக்கலாம்

மும்பை சிட்டியில் குடியிருக்கலாம்

ஆனால்

எலக்டிரிக்சிட்டியில் மட்டும் குடியிருக்க முடியாது.

ஜி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி-1.

அப்படீங்களா!

வேலூர் - போளூர் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊரின் பெயர்: "பால்' வார்த்து வென்றான்

குடியாத்தம் நீர் வீழ்ச்சி அமைந்துள்ள இடம் : "மோர்'தானா

ஆம்பூர் - வாணியம்பாடி சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர் : "தயிர்'க்காரன்பட்டி

காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள ஊரின் பெயர்: "நெய்'க்காரன்பட்டி

எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்.

எஸ்எம்எஸ்

இரண்டு தருணங்களில் மட்டும் உனக்கு நண்பனாக இருக்க விரும்புகிறேன்...

1.இப்போது,   2.எப்போதும்

முத்து ஆனந்த், வேலூர்.

மைக்ரோ கதை

இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு முதிய துறவியும், ஓர் இளைய துறவியும் அந்தக் கோயில் மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

இருவருக்கிடையேயும் ஓர் இனந்தெரியாத ஒட்டுதல் ஏற்பட்டது.

""என் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதற்குக் கூடத் திராணியில்லாதவன் ஆகிவிட்டேன். எனக்கெல்லாம் எதுக்கு குடும்பம்? அதனால் துறவியாகிவிட்டேன்'' என்றார் முதிய துறவி.

""நான் ஓர் அனாதை. என்னைக் கவனிக்க யாருமில்லை. கல்யாணம் செய்து வைக்க யாருமில்லை. இல்லற வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டபோது எனக்கெதுக்கு இல்லற வாழ்க்கை. அதனால் துறவியாகிவிட்டேன்'' என்றார் இளைய துறவி.

மறுநாள் விடிந்ததும் இருவரும் துறவறத்திலிருந்து விடுபட்டுவிட்டனர். முதிய துறவி மாமனாராகிவிட்டார். இளைய துறவி அவருக்கு மருமகனாகிவிட்டார்.

சி.ரகுபதி,  போளூர்.