இயக்குநர் முகமது இசாக் இரண்டு மணி நேரத்திற்குள் "அகடம்' என்ற திரைப்படத்தை தயாரித்து சாதனை புரிந்துள்ளார். அகடம் என்றால் தந்திரம், சூது, கபடம் என அர்த்தம் என்கிறார் இயக்குநர். இப்படம் 2010-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சோகமான சம்பவத்தை பின்ணனியாகக் கொண்டது. படத்தில் நடிக்க பிரபலமான நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். பாடல்கள் இல்லாத இப்படத்தை குறுகிய நேரத்திற்குள் முடித்து தணிக்கை சான்று பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பக்கிரிசாமி
கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற பீலே, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார். 17-வது வயதில் ஸ்வீடனில் நடைபெற்ற
உலகக் கோப்பை போட்டியில் வாகை சூடியவர் பீலே. இவரது வரலாற்று வெற்றிகளை திரைப்படமாக தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படம் 2014 பிரேஸிலில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியின்போது திரையிடப்படுமாம்.
நடிகர்களின் வாரிசுகள் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க வந்தபோது, தயாரிப்பாளர் ஒருவரின் வாரிசாக நடிப்புலகில் புகுந்தவர் அமீர்கான். ஆடை அணிவதிலும் அமீர்கான் ரொம்ப ரொம்ப வித்தியாசமானவர். நீலம்...பச்சை...மஞ்சள் என எந்த நிறத்திலும் பேண்ட் போடுவார். மேட்ச் பற்றி கவலைப்படாமல் டீ-சர்ட், கோட்டு என அணிந்து கொள்வார். முதலில் இதனை இந்திப் படவுலகம் ஆச்சர்யமாய் பார்த்தாலும், இன்று இவை அமீர்கான் ஃபேஷன் ஆகிவிட்டன.
-ராஜி ராதா
அசோகா சென் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். வயது 57. அலகாபாத் நகரில் செயல்படும் ஹரிஷ் சந்திர ஆராய்ச்சி நிலைய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பேராசிரியர். இவரின் மாதச் சம்பளம் ரூ.15 லட்சம்.
இயற்பியல் தவிர, பிற பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு அறவே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத "ஸ்ட்ரிங் தியரி' என்ற பரிவில் அசோக் சென் வல்லுநர். உலக அளவில் வெகு சிலரே, இந்த பாடப்பிரிவை அறிந்திருப்பர். உலகில் உயிரினங்கள் முதலில் தோன்றியது எவ்விதம் என்பதை ஆராயும் அரிய ஆய்வு இது.
உயிரினங்களின் முதல் தோற்றம் குறித்த அரிய தகவல்களைக் கண்டறிவதில் இவர் ஓர் அசகாய சூரர். இவரின் மனைவி சுமதி ராவ் கூட இயற்பியல் வல்லுநர்தான். அசோக் சென்னின் தந்தையும் இயற்பியல் துறை ஆசிரியர்தான்.
உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுடன் வழங்கப்படும் தொகையைவிட, மூன்று மடங்கு அதி தொகை கொண்டது "ரஷ்ய நோபல்' பரிசு. இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருது ரஷ்யாவின் இன்டர்நெட் தொழிலபதிபரான யூரிமில்னர் பெயரில் வழங்கப்படும். அவ்விருதைப் பெற்ற முதல் இந்தியப் பேராசிரியர் அசோகா சென்தான்.
-நா.கிருஷ்ணவேலு
""1926-ம் ஆண்டில் "தமிழ்நாடு' பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது ஒரு வருஷ மலர் வெளியிட்டோம். அதில் சித்திரங்களுடன் பாரதி பாடல்களை வெளியிட நான் ஏற்பாடு செய்தேன். பாரதி பாட்டுக்குத் தமிழகத்தில் சித்திரம் போட்டு வெளியிட்டது அதுவே முதல் தடவை'' என்று டி.எஸ்.சொக்கலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.
தங்க.சங்கரபாண்டியன்
இந்திய அரசியல் பாரம்பரியத்தை அமெரிக்காவும் கடைப்பிடிக்கப்போகிறது. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் தந்தையும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்தான்!
தற்போது முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தன் தம்பியை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும்படி கூறியுள்ளார். ஆக அங்கும் வாரிசுகளின் ராஜ்ஜியம்தான்.
அதே போன்று பிரிட்டனிலும் இது தொடரலாம். கன்சர்வேடிவ் எம்.பி.ஜோ.ஜான்சன் பிரதமரின் கொள்கை வகுப்பாளராக உள்ளார். அடுத்து பிரதமர் பதவிக்கு முயற்சிக்க வேண்டியதுதான் என கூறியுள்ளார் இவருடைய அண்ணன் போஸ் ஜான்சன்! இவர் லண்டன் மேயராக உள்ளார். தம்பிக்கு அடுத்து அண்ணன் ஜான்சனும் இங்கிலாந்து பிரதமர் ஆக முயற்சிக்கலாம்.
ராஜி ராதா
பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் கார்ட்டூன் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க உள்ளார். "மைக் டைசனின் மாயவித்தை' என்று சீரியலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. பந்தய புறாக்களுக்கு பயிற்சி அளிப்பதை பொழுதுபோக்காக கொண்ட 46 வயதான டைசன் நேரடியாகவும் கார்ட்டூன் வடிவிலும் காட்சியில் தோன்றுகிறார்.
அமெரிக்க உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து நியூயார்க்குக்கு பறந்து கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டதும் ""நான் எப்போதும் உன்னை காதலிக்கிறேன்'' என்ற விட்னி ஹூஸ்டனின் பிரபலமான பாடலை ஒருவர் பாட ஆரம்பித்தார். பாடிக்கொண்டே இருந்தார். இதர பயணிகள் பாடுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும் நிறுத்தவில்லை. மொத்தம் ஆறுமணி நேர பயணம். வேறு வழியின்றி விமானி கான்சஸ் நகரத்தில் விமானத்தை இறக்கினார். இதர பயணிகளுக்கு தொல்லை கொடுத்தவரை வலுக்கட்டாயமாக அங்கு இறக்கிவிட்டுவிட்டு விமானம் பறந்தது. இப்படியும் ஒரு ரசிகர்!
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

