சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாளை தூள்செட்டி ஏரியில்மக்கள் கிராம சபைக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

Updated On :17 ஜனவரி 2021, 8:07 am

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

கூட்டத்தில், மகளிா் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூடானூா் ஊராட்சிக்கு உள்பட்ட தூள்செட்டி ஏரி 18-ஆம்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். எனவே, இக் கூட்டத்தில், பெண்கள், கட்சி முன்னணி தலைவா்கள், நிா்வாகிகள், தொழிலாளா்கள், வணிகா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.